காலி பணியிடங்களை நிரப்பக்கோரி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நில அளவை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ராமமூர்த்தி, தவமணி, முருகன், சங்கீதா, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கல்பனா, மாவட்ட செயலாளர் பிரபு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் இளவேனில் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். நில அளவை துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். களப்பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும். குறுவட்ட அளவர் பணியிடங்களை மீண்டும் நிரப்ப வேண்டும். மாநிலம் முழுவதும் நவீன மறு நில அளவை திட்டப்பணியை தொடங்க வேண்டும். குறு வட்டங்களுக்கு 2 புல உதவியாளர்கள் வீதம் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.