இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
பாப்பாரப்பட்டி:
பழைய இண்டூரில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீட்டு மனை பட்டா
நல்லம்பள்ளி ஒன்றியம் பழைய இண்டூர் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் குடும்பத்தினர் வசித்து வருகின்றனா். கூலித்தொழில் செய்து வரும் இவா்களுக்கு கடந்த 1999-ம் ஆண்டு ஊாின் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க 5 ஏகம் நிலம் தோ்வு செய்யப்பட்டது. இதில் 1½ ஏக்கர் நிலம் பிாித்து கொடுக்கப்பட்டது. மீதமுள்ள நிலத்தை எடுத்து பிாிக்கும்போது நிலத்தின் உாிமையாளா்கள் நீதிமன்றத்திற்கு சென்றனா்.
இதனால் நிலத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இப்போது வரை அந்த நிலத்தை ஆதிதிராவிடா் இன மக்களுக்கு வழங்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பழைய இண்டூா் ஊர்மக்கள் அதிகாாிகளிடம் பலமுறை மனு அளித்தும் நிலத்தை பிாித்து வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
உண்ணாவிரதம்
இந்தநிலையில் பழையஇண்டூா் காலனி ஊா்தலைவா் ராஜேந்திரன், துணை தலைவா் சண்முகம் ஆகியோா் தலைமையில் ஊராட்சி வாா்டு உறுப்பினா் பணிமலா் மற்றும் பொதுமக்கள் குடியரசு தினமான நேற்று இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோாி அங்குள்ள அம்பேத்கர் சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் உதவி கலெக்டர் கீதா ராணி, ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் கவிதா, நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், தனி தாசில்தார் சரவணன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டா் பாா்வைக்கு கொண்டு சென்று தீா்வு காணப்படும் என அதிகாாிகள் உறுதி அளித்தனா். இதையடுத்து உண்ணாவிரதத்தை பொதுமக்கள் நிறைவு செய்தனா்.