மணல் ஏற்றி வந்த வேனை சிறைபிடித்த பொதுமக்கள்


மணல் ஏற்றி வந்த வேனை சிறைபிடித்த பொதுமக்கள்
x

அய்யலூர் அருகே மணல் ஏற்றி வந்த வேனை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

திண்டுக்கல்

அய்யலூர் அருகே உள்ள கெங்கையூர் பகுதியைச் சேர்ந்த பட்டா நிலத்திலிருந்து மணல் அள்ளிக்கொண்டு வேன் ஒன்று நேற்று கோடாங்கி சின்னான்பட்டி அருகே சென்றது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்தப் பகுதியில் மணல் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி, மணல் ஏற்றி வந்த வேனை சிறை பிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வேனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story