தஞ்சை, நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம்- அரசு பணியாளர்கள் சங்கம்


தஞ்சை, நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம்- அரசு பணியாளர்கள் சங்கம்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:30 AM IST (Updated: 30 Jan 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை, நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாக அரசு பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாகப்பட்டினம்

நாகையில் அரசு பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க கிழக்கு மண்டல மாநிலத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மகேந்திரன், மகளிர் அணி மாநில துணைத்தலைவி இளமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் குணசீலன் வரவேற்றார். கூட்டத்திற்கு பின்னர் மாநில தலைவர் சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வருகிற 9-ந் தேதி கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளது. மாவட்ட தலைநகரங்களில் ்இந்த போராட்டம் நடைபெறும்' என்றார். இதில் மாநில பொருளாளர் பிரகாஷ், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் கோவிந்தராஜ், ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில இணைச் செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி விடுதி பணியாளர் சங்க நிர்வாகி ஜெகன் நன்றி கூறினார்.


Next Story