குடியிருப்புகளின் கழிவுநீர் ரோட்டில் ஓடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
குடியிருப்புகளின் கழிவுநீர் ரோட்டில் ஓடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அவினாசி
அவினாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட யுவராஜ் அவென்யூ குடியிருப்புகளின் கழிவுநீர் ரோட்டில் ஓடுவதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் யுவராஜ் அவென்யூ பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
அவினாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழங்கரை பகுதியில் அமைந்துள்ள யுவராஜ் அவென்யூ என்ற தனியார் குடியிருப்பு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அந்த பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை தண்ணீர் நெடுஞ்சாலையில் வழிந்து ஓடுவதால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரிய இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை கடந்த 2 ஆண்டுகளாக இதேபோல் சாலையில் சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க எந்த நடவடிக்கையும். எனவே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பழ.சண்முகம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.
---