மயானத்துக்கு செல்ல பாதை வசதி கேட்டு இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்


மயானத்துக்கு செல்ல பாதை வசதி கேட்டு இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

மொரப்பூர் அருகே உள்ள மருதிப்பட்டியை சேர்ந்த பெருமாள் (வயது 80) உடல் நலக்குறைவால் நேற்று இறந்தார். அவருடைய உடலை உறவினர்கள் மயானத்துக்கு எடுத்து சென்றனர். அப்போது தனியார் நிலத்தின் வழியாக எடுத்து செல்ல அதன் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தநிலையில் பெருமாளின் உறவினர்கள் மயானத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி, மொரப்பூர்-எச்.ஈச்சம்பாடி சாலையில் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் தாசில்தார், மொரப்பூர் போலீசார் அங்கு சென்று, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் ஒரு வாரத்துக்குள் பாதை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று தெரிவித்தன. இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.


Next Story