மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:30 AM IST (Updated: 28 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி மண்டல செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் கோபிநாத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி பாண்டியன், அமைப்புகளின் நிர்வாகிகள் கோவிந்தராஜ், சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் பேசினர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காரல் மார்க்ஸ் கொள்கைகள் குறித்து அவதூறாக பேசிய தமிழக கவர்னர் அந்தக் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story