தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பால் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பால் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் பணியாளர்கள் சங்கம் சார்பில் பால் விலையை உயர்த்தி வழங்கக்கோரி தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க தலைவர் வாழப்பாடி ராஜேந்திரன், பணியாளர்கள் சங்க தலைவர் கதிரவன், செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பசும் பால் லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பால் லிட்டருக்கு 52-ம் கொள்முதல் விலை வழங்க வேண்டும். சங்கத்தின் மார்ஜின் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். லிட்டருக்கு ரூ.7 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகளுக்கு ஆணி வேராய் செயல்படும் கிராம சங்க பணியாளர்களை பணிவரன் முறைப்படுத்தி ஆவின் பணியாளராக நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story