எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்


எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 March 2023 2:15 AM IST (Updated: 28 March 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விலகவேண்டும். தொடர்ந்து 8 தேர்தல் தோல்விகளை ஏற்படுத்திவிட்டு, பொதுச்செயலாளர் பதவியை அபகரிக்க முயற்சிப்பதாக அவருக்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் பசும்பொன், தெற்கு மாவட்ட செயலாளர் வைகைபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, எடப்பாடி பழனிசாமி பதவி விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார். முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடை அமைப்பதற்கு போலீசார் அனுமதி மறுத்து, மேடையை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அதைத்தொடர்ந்து லாரியை வரவழைத்து அதில் நின்றவாறு நிர்வாகிகள் பேசினர்.


Related Tags :
Next Story