திருவட்டாரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
திருவட்டாரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி
திருவட்டார்
திருவட்டார் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் திருவட்டார் காங்கரை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாத்தூர் பகுதியில் பிரச்சினைக்குரிய இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்க உள்ளது. அந்த இடத்தில் மத வழிபாடு நடத்துவதை கண்டித்தும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில இந்து முன்னணி செயலாளர் குற்றால நாதன், மாவட்ட இந்து முன்னணி ஆலோசகர் மிசா சோமன், மாவட்ட செயலாளர் வினில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story