ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
பல்லடம்
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அந்த வகையில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினார். திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் பாக்கியசீலி, செயலாளர் கௌசல்யா, பொருளாளர் கவிதா, மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story