கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
தேனி
தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராஜதுரை தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்ககூடாது, தொழிலாளர் நலவாரியங்களை முடக்க கூடாது, தேனி நகரில் நீர் நிலைகளை பாதுகாத்து பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story