திண்டுக்கல்லில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல்லில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
x

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் அரபு முகமது தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சரத்குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது சிலர் தரையில் படுத்து தண்டால் எடுத்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் பாலச்சந்திர போஸ், மாவட்ட செயலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



Next Story