பழனி, கோபால்பட்டி பகுதிகளில் 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


பழனி, கோபால்பட்டி பகுதிகளில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x

பழனி, கோபால்பட்டி பகுதிகளில் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

பழனி நகர மற்றும் ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பழனி வேல் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். நகர தலைவர் விஜயகுமார், செயலாளர் சுரேஷ், பொருளாளர் மாரிக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டு, அக்னிபத் திட்டத்தை எதிர்த்தும், அதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கோபால்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள், ஒன்றிய செயலாளர் வெள்ளைகண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரவண கோபால், பாப்பாத்தி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.



Next Story