அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x

பழனியில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

பழனி பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பழனி வேல் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு நகர செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு, அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.



Next Story