மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்:வக்கீல் சகோதரிகள் கைது
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்திய வக்கீல் சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்திய வக்கீல் சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.
வக்கீல் சகோதரிகள் போராட்டம்
மதுரையை சேர்ந்தவர் வக்கீல் நந்தினி. இவர் சட்டக்கல்லூரியில் படித்த போதே மதுக்கடைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை தன் தந்தையுடன் இணைந்து நடத்தினார். இதனால் அவர் பலமுறை கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும், தவறான பொருளாதார கொள்கையை கடைபிடிப்பதாக மத்திய அரசை கண்டித்தும், நந்தினி மற்றும் அவரது தங்கையும் வக்கீலுமான நிரஞ்சனா இணைந்து மதுரை காந்தி மியூசியம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
அதன்படி நேற்று காலை மதுரை காந்தி மியூசியம் முன்பு வந்த அவர்கள் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து பதாகையை ஏந்தி, கோஷம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்கள் கூடும் பொது இடத்தில் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றும், உடனே போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினர்.
கைது
ஆனால் அவர்கள் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் போட்டனர். அதை தொடர்ந்து தல்லாகுளம் போலீசார், வக்கீல் சகோதரிகளை கைது செய்தனர்.