ஆ.ராசா எம்.பியை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


ஆ.ராசா எம்.பியை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x

தேனியில் ஆ.ராசா எம்.பியை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

இந்து எழுச்சி முன்னணி சார்பில் தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா எம்.பி. இந்துக்கள் குறித்து அவதூறான கருத்துகள் தெரிவித்ததாகவும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு நகர தலைவர் செல்வபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட இணைச்செயலாளர் பாண்டியாபிள்ளை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, ஆ.ராசாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் இந்து எழுச்சி முன்னணியினர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்தனர்.


Related Tags :
Next Story