அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடந்தது.
திருச்சி
தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட 14 கட்சிகள் மற்றும் அமைப்புகள் உள்ளடக்கிய மக்கள் சேவை கூட்டணியை சேர்ந்தவர்கள் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட கொண்டையம்பேட்டை மயானத்திற்கு கடந்த நவம்பர் மாதத்திற்குள் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று எழுதி கொடுத்த பின்னரும், இதுவரை எதுவும் செய்யாததை கண்டித்தும், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் இந்த காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் கோரிக்கை மனுவை வழங்கிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story