தேசிய நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து சாலை மறியல்
சுவாமிமலை அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து சாலை மறியல் நடந்தது.
கபிஸ்தலம்:
சுவாமிமலையில் பூம்புகார் - கல்லணை (புளியஞ்சேரி) சாலை தடுப்பு நீக்கும் குழு சார்பில் ஆலோசனை கூட்டம் ஒருங்கிணைப்பாளர் கோதண்டபாணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்சுவாமிமலை அருகே புளியஞ்சேரியில் மிகவும் பழமையான புராதான சாலையாக கல்லணை- பூம்புகார் சாலை உள்ளது. பயன்பாட்டில் இருந்த அந்த சாலையில் தேசிய நெடுஞ்சாலை பாதையாக மாற்றி அமைத்து வருகிறார்கள்.இந்த சாலையை பாதசாரிகள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள், அவசரகால சிகிச்சைக்கு செல்பவர்கள் பயன்படுத்தி வந்தனர்மேலும் சுவாமிமலை கோவிலுக்கு செல்பவர்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆக மாற்றி அமைப்பதால் இவ்வழியில் அனைவரும் மாற்று வழியில் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெண்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்தை அடைகிறாா்கள்.எனவே சாலையில் தடுப்பை அகற்றி நேராகவே வழிவிடுமாறு அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதன்காரணமாக பூம்புகார் சாலையில் அகலக்குறைவாக ஒருவழிப்பாதை அமைக்க முயற்சி நடக்கிறது.அகலக் குறைவான சாலை போக்குவரத்திற்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த பாதையின் இடையே அகலமான இரு வழிப்பாதை அமைக்க வலியுறுத்தி வருகிற 11-ந் தேதி(வெள்ளிக்கிழமை) பூம்புகார் - கல்லணை (புளியஞ்சேரி) சாலை தடுப்பு நீக்கும் குழு சார்பில் தேசிய நெடுஞ்சாலை துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.