அதிகாரிகள் வராததை கண்டித்து கருப்பு துணி கட்டி போராட்டம்


அதிகாரிகள் வராததை கண்டித்து கருப்பு துணி கட்டி போராட்டம்
x

கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகள் வராததை கண்டித்து கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த அஸ்தினாபுரம் கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் போதுமான டாக்டர்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் கிராம சபை கூட்டங்களை அரசு அதிகாரிகள் வராமல் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் என்று பொதுமக்கள் கண்களிலும் வாய்களிலும் கருப்பு துணி கட்டிக்கொண்டு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

மேலும் கிராமசபை கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கிராம பொதுமக்கள் வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.


Related Tags :
Next Story