தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றுவதை கண்டித்து பொதுமக்கள் மறியல்


தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றுவதை கண்டித்து பொதுமக்கள் மறியல்
x

தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றுவதை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேறுவதால் நவ்லாக் புளியங்கண்ணு பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாக கூறி நேற்று சித்தூர்-சென்னை எம்.பி.டி.சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வாலாஜா தாசில்தார் ஆனந்தன், ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்ட போலீசார் சம்படத்துக்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின் பேரில் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலினால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story