ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு த.மு.மு.க.வினர் போராட்டம்
ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு த.மு.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
கொள்ளிடம்:-
நபிகள் நாயகத்தை பற்றி தவறான கருத்துகளை கூறிய பா.ஜனதாமுன்னாள் நிர்வாகிகளை கண்டித்து கொள்ளிடத்தில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு த.மு.மு.க.வினர் தைக்கால் கிளை செயலாளர் முகம்மதுஜின்னா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு போலீஸ் லாமேக் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அமுதாராணி, சிங்காரவேலு, சந்திரா உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் பா.ஜ.க. முன்னாள் நிர்வாகிகளை கைது செய்யக்கோரி சீர்காழியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் இளங்கோவன், மனிதநேய மக்கள் கட்சி மாநில செயலாளர் முசாகுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story