பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
களியக்காவிளை:
குழித்துறை பணிமனை முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு அமைப்பின் பணிமனை கிளை தலைவர் ஜஸ்டின் அருள் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சி.ராஜன், அமைப்பாளர் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெகநாதன், மணிகண்டன், மாவட்ட அமைப்பாளர் நடேசன், மாவட்ட தலைவர் என்.ஜெயபாலன் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். நிர்வாகிகள் கிருஷ்ணன், ஜனார்த்தனன், ரவீந்திரன், ராஜேந்திரன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் போக்குவரத்து கழகங்களை தனியாரிடம் விற்பதை கண்டித்தும், ஒப்பந்த முறையில் டிரைவர் நியமனம் செய்வதை கைவிட வேண்டும், உதிரி பாகங்கள் வழங்காமல் தொழில்நுட்ப பணியாளர்களை இடைநீக்கம் செய்து தண்டனை வழங்கி பழிவாங்குவதை கைவிட வேண்டும், மத்திய அரசு உயர்த்தி வழங்கிய 4 சதவீத தினப்படியை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.