பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடியில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பண்ருட்டி
பண்ருட்டி
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், மணல், கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், பண்ருட்டி நகராட்சியில் 33 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்படாததை கண்டித்தும் பண்ருட்டியில் பா .ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு சாலை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜீவா.வினோத்குமார் தலைமை தாங்கினார்.
இதில் பண்ருட்டி நகர தலைவர் மோகன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் அசோக் ராஜ், தொழில் பிரிவு தலைவர் முருகன், மாவட்ட துணைத் தலைவர் செல்வகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரிசி மண்டி ரகு, தொழில் பிரிவு துணை தலைவர் செந்தில், வர்த்தகப்பிரிவு செயலாளர் சங்கர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணி, பிரிவு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஸ்ரீமுஷ்ணம்
இதேபோல் ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி அண்ணாசிலை அருகே கடலூர் மாவட்ட தலைவர் கே.மருதை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் வடமலை முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக விவசாய அணி மாநில துணைத்தலைவர் ரமேஷ், மாவட்ட துணை தலைவர் சண்முகம், செயலாளர் ராஜசேகர், மகளிர் அணி தலைவி மாலா இருதயராஜ், வர்த்தக பிரிவு தலைவர் யுவராஜா, ஊடகப் பிரிவு தலைவர் பிரபாகரன், ஒன்றிய பொதுச்செயலாளர் கார்த்திகேயன், லோகு பாண்டியன், ஒன்றிய துணை தலைவர் சிவராமன், பாவாடை உள்பட பலர் கலந்துகொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
திட்டக்குடி
திட்டக்குடி பஸ் நிலையத்தில் பா.ஜ.க. நகர தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில், அண்ணாதுரை முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்தும், மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தடுக்க கூடாது, கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் சிவா, சுரேஷ், அய்யப்பன், பிரகாஷ், விஷ்ணுசிங் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.