குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்

கடலூர் புதிய பஸ் நிலையத்தை, கடலூர் தொகுதிக்குள்ளேயே அமைக்க வேண்டும். கொண்டங்கி ஏரி, கேப்பர் மலையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். கடலூரின் வடிகாலான பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால்களை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் கடலூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, முனுசாமி, மாயவேல், புருஷோத்தமன், பாலு.பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பொது செயலாளர் தேவநாதன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக பொது செயலாளர் மருதவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் திலகர், மாநில செயலாளர் சந்திரசேகரன், வி.சி.க. மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், ம.தி.மு.க. ராமலிங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சுப்புராயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், தமிழ் மாநில காங்கிரஸ் சாம்பசிவம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹீம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். முடிவில் மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட செயலாளர் அமர்நாத் நன்றி கூறினார்.


Next Story