இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். விழாவில் பட்டம் பெற வந்த இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் அரவிந்த்சாமியை போலீசார் வெளியேற்றினர். இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி திருவாரூரில் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி எதிரில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் திருமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சந்தோஷ் முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் அபிஷா கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் பிரவின், பொன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.