கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கேட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்


கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கேட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
x

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கேட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை


மதுரை மாநகர், புறநகர் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புறநகர் மாவட்டச்செயலாளர் பிருந்தா தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட தலைவர் டேவிட், புறநகர் மாவட்ட தலைவர் ராகுல் மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினார்கள். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான மத்திய அரசின் நிதி பங்கேற்புடன் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டமும் மாநில அரசின் உயர்கல்வி சிறப்பு போஸ்ட் மெட்ரிக் திட்டமும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவியாக இருந்தது.

இந்த நிலையில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே இந்த போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்கள் இணையதள பதிவு மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இதுவரை மாநில முழுவதும் குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித்தொகைக் கான விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளார்கள். ஏனென்றால் இந்த கல்வி உதவித் தொகை பெறுவதற்கு 27 வகையான ஆவணங்கள் கேட்கப்படுகிறது. அதில் ஆதார் கார்டு உடன் வங்கி கணக்கு எண்ணை இணைத்திருக்க வேண்டும், புதிய சாதி சான்றிதழ் மற்றும் அந்த சாதி சான்றிதழில் புகைப்படத்துடன் எண்களும் இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்தை பரிந்துரைக்கிறது. எனவே கல்வி நிலையங்களிலே விண்ணப்பிக்கும் முறையையே பின்பற்றிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.


Next Story