வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம்


நாகையில் வக்கீல் சங்கம் சார்பில் மின் தாக்கல் (இ-பில்லிங்) முறையை கண்டித்து கடந்த 2 வாரங்களாக வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுப்பட்ட நிலையில் நேற்று ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்நாதன், வக்கீல் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சென்னையில் நடைபெறும் நாடு தழுவிய வக்கீல்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்வது மற்றும் மின் தாக்கல் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


Next Story