மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்


மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில பிரசார செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில செயலாளர் பூரிநாதன், மாநில துணை பொது செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். கள்ளக்குறிச்சி நகராட்சி பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த இலவச கழிவறையை, கட்டண கழிவறையாக மாற்றியதை கண்டித்தும், மேலும் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த இலவச கழிவறையின் ஒரு பகுதியை மக்களுக்கு எதிராக உணவு விடுதி நடத்த அனுமதி அளித்த நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story