ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வசு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். பொருளாளர் ராமலிங்கம் வரவேற்றார்.

இதில் கலந்து கொண்ட ஓய்வூதியர்கள், ''புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அளிக்கும் அதே தேதியில் மாநில அரசும் வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் அளவுக்கு அதிகமாக கெடுபிடிகளை காட்டி ஓய்வூதியர்களை தவிக்க விடுவதை நிறுத்த வேண்டும். மருத்துவ செலவினை திரும்ப வழங்குவதில் இன்சூரன்ஸ் நிறுவனம் காட்டும் அளவு கடந்த தாமதத்தை தவிர்க்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், பணிக்கொடை ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும்'' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட மற்றும் வட்ட கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story