தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் போராட்டம்
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில்
தேர்தல் வாக்குறுதிகள் விரைந்து நிறைவேற்ற வேண்டும், ஓய்வூதியதாரர்களில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் விரைவாக வழங்க வேண்டும். பணம் இல்லா மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும். பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாதந்தோறும் ரூ.1000 மருத்துவ படி வழங்க வேண்டும். ஓய்வூதியர் இறக்கும் தருவாயில் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் பிரச்சினைகளை பேசி தீர்வு காண கூட்டு ஆலோசனை குழு அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.