கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி பாலை தரையில் கொட்டி போராட்டம்


கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி பாலை தரையில் கொட்டி போராட்டம்
x

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி ஊத்துக்குளி அருகே தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கறவை மாடுகளுடன் வந்து பாலை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

திருப்பூர்,

மாடுகளுக்கு கொடுக்கப்படும் தவிடு, பருத்திகொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனம் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சோளத்தட்டை உள்ளிட்ட தீவனம் உற்பத்தி செலவுகள் அதிகரித்து விட்டன. எனவே பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். பால் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கலப்பு தீவனத்திற்கு மானியம் கொடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஊத்துக்குளி அருகே சேடர்பாளையத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

பாலை தரையில் கொட்டினர்

இதில் பால் உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயிகள் கறவை மாடுகளுடன் வந்து கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் அவர்கள் முடிவில் பாலை தரையில் ஊற்றி பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.


Next Story