திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2023 2:30 AM IST (Updated: 27 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கம், அகில இந்திய தொழிற்சங்க மய்யக் கவுன்சில் ஆகியவை சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் விற்பனையாளர் சங்க மாநில தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாநில சிறப்பு தலைவர் இரணியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். டாஸ்மாக் மதுக்கடை வாடகை, மின்கட்டணம், மதுபாட்டில் இறக்கும் கூலி, சேதாரம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் இன்றி பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இதில், டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story