தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
நெல்லை மேலப்பாளையம் சந்தை முக்கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளிட தடை விதிக்க வேண்டும். மேலும் ஏற்கனவே வெளியான புர்கா, வெளியாக உள்ள பர்ஹானா திரைப்படங்களையும் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட தலைவர் மஸ்வூத் உஸ்மானி தலைமை தாங்கினார். மேலாண்மை குழு உறுப்பினர்கள் யூசுப் அலி, அப்துல் நாசர், மாநில செயலாளர் செய்யது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் செங்கோட்டை முகமது பைசல் கண்டன உரையாற்றினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story