கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டம்
திருவண்ணாமலை அருகே வீடுகளை இடிக்க முயற்சி செய்வதை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக நடத்திய போராட்டத்தில் கண்களில் கருப்பு துணியை கட்டி கோஷம் எழுப்பினர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே வீடுகளை இடிக்க முயற்சி செய்வதை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக நடத்திய போராட்டத்தில் கண்களில் கருப்பு துணியை கட்டி கோஷம் எழுப்பினர்.
திருவண்ணாமலை அருகில் உள்ள சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்று குடியிருப்புகளை இடிக்க முயற்சி செய்வதை நிறுத்தக்கோரி அகில இந்திய விவசாயிகள் மகாசபை, அகில இந்திய முற்ேபாக்கு பெண்கள் கழகம் சார்பில் நேற்று முன்தினம் தொடர் முழக்க போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நூதனமான முறையில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story