நெல்லை அருகே கோவில் ஊழியர் கொலை:உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம்
நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட கோவில் ஊழியர் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட கோவில் ஊழியர் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில் ஊழியர்
நெல்லை அருகே உள்ள மேலச்செவல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டுசாமி (வயது 55). இவர் அங்குள்ள நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
கடந்த 15-ந் தேதி பொங்கல் அன்று கோவிலில் இருந்த கிருஷ்ணனை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
கோவில் வளாகத்தில் மது அருந்தியவர்களை கண்டித்ததால் கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
7 பேர் கைது
இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலச்செவலை சேர்ந்த கொம்பையா உள்பட 7 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட கிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3-வது நாளாக போராட்டம்
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக கிருஷ்ணன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையொட்டி மேலச்செவல் பகுதி மற்றும் ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி வளாக பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.