10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போராட்டம்


10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போராட்டம்
x

10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போராட்டம் நடந்தது.

பெரம்பலூர்

புதுக்கோட்டை அருகே இறையூரில் வேங்கை வயல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் உப்போடை, எளம்பலூர், இந்திரா காந்தி நகர், வடக்கு மாதவி, தேவையூர், மறவநத்தம், மேட்டுச்சேரி, நெய்குப்பை, திருவளாந்துறை அம்பேத்கர் நகர், ராம்ஜி நகர், பசும்பலூர், அகரம், ராயப்பா நகர், நாரணமங்கலம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாதிக்கப்பட்ட வேங்கை வயல் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக அரசு, போலீசாரை கண்டித்தும், அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் மேற்கண்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story