நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் மகாராஜன் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

சிவந்திபட்டி போலீஸ் நிலையத்தில் இறந்த முருகேசன், மாணிக்கராஜ் ஆகியோர் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அம்பை, நாங்குநேரி, தச்சநல்லூர், வல்லநாடு, பனவடலிசத்திரம், செங்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.


Next Story