மன்னார்குடியில் இன்று கண்டன ஊர்வலம்


மன்னார்குடியில் இன்று கண்டன ஊர்வலம்
x

செம்மொழி எக்ஸ்பிரசை திருவாரூரில் இருந்து இயக்க பரிசீலனை செய்வதை கண்டித்து மன்னார்குடியில் இன்று ஊர்வலம் நடத்தப்படும் என வர்த்தக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி வர்த்தக சங்க அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.வி.ஆனந்த் தலைமை தாங்கினார்.முன்னாள் தலைவர் கே.ஜே.ஆர்.பாரதி ஜீவா, பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ெரயிலை திருவாரூரில் இருந்து இயக்குவதற்காக ெரயில்வே துறை பரிசீலனை செய்து வருகிறது.பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ெரயிலை மன்னார்குடியில் இருந்து தொடர்ந்து இயக்க வேண்டும். மன்னார்குடியில் இருந்து இயக்கப்பட்டு வரும் எந்த ெரயிலையும் மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி வர்த்தக சங்கங்கள், பல்வேறு சேவை சங்கங்கள் மற்றும் ஆட்டோ, கார், வேன், லாரி, ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கங்கள் இணைந்து இன்று(திங்கட்கிழமை) கண்டன ஊர்வலம் நடைபெறுகிறது. ஊர்வலம் மன்னார்குடி தேரடியில் இருந்து புறப்பட்டு கடைவீதி வழியாக உதவிகலெக்டர் அலுவலகம் அடைந்து கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.


Next Story