திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத்தினர் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதியை வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீதிபதி ஆவதற்கான தகுதி இருந்தும் கொலீஜியம் முறையை பின்பற்றாமல் உயர் சாதியினரை அதிகளவில் நீதிபதிகளாக நியமிக்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், தமிழக அரசு இதில் சரியான நிலைப்பாட்டை பின்பற்றி சமூக நீதியை நிலைநாட்ட உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story