சேலம் புதுரோட்டில் உள்ளடாஸ்மாக் கடைக்கு பூட்டுபோடும் போராட்டம்
சேலம் புதுரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டுபோடும் போராட்டம் நடந்தது.
சேலம்
சூரமங்கலம்,
சேலம் புதுரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, கடைக்கு பூட்டுபோடும் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று கட்சியின் மேற்கு மாநகர செயலாளர் கனகராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் திரண்டனர். மாவட்ட செயலாளர் சண்முகராஜா டாஸ்மாக் கடையால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து பேசினார். பின்னர் கட்சியினர் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட ஊர்வலமாக சென்றனர். கடையின் அருகே அவர்களை சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் டாஸ்மாக் அதிகாரிகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, 5 நாட்களில் கடையை அகற்றுவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story