கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு: கல்வீச்சில் இன்ஸ்பெக்டர், அதிகாரிகள் உள்பட 11 பேர் காயம்- போலீஸ் தடியடி-24 பேர் கைது; பேரையூர் அருகே பரபரப்பு


கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு: கல்வீச்சில் இன்ஸ்பெக்டர், அதிகாரிகள் உள்பட 11 பேர் காயம்- போலீஸ் தடியடி-24 பேர் கைது; பேரையூர் அருகே பரபரப்பு
x

கொடிக்கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டபோது கல்வீசப்பட்டதால் இன்ஸ்பெக்டர், போலீசார், அதிகாரிகள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். எனவே போலீசார் தடியடி நடத்தினர்.

மதுரை

பேரையூர்,

கொடிக்கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டபோது கல்வீசப்பட்டதால் இன்ஸ்பெக்டர், போலீசார், அதிகாரிகள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். எனவே போலீசார் தடியடி நடத்தினர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எஸ்.மேலப்பட்டியில் ஆக்கிரமிப்பை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கமலக்கண்ணன், துணை சூப்பிரண்டு இலக்கியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆசிக், சிவசங்கர நாராயணன் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் அந்த பகுதிக்கு நேற்று சென்றனர்.

அப்போது விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் மேலப்பட்டியில் உள்ள ஒரு தரப்பினர், கொடி கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தள்ளுமுள்ளு-தடியடி

அதே நேரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எந்திரம் வந்தபோது சிலர் மறித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

ேமலும் அதிகாரிகள், கொடி கம்பங்களை அகற்றினர். அப்போது கூட்டத்தில் இருந்து கற்கள் வீசப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார், லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

24 பேர் கைது

கல்வீச்சு சம்பவத்தில் நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போலீஸ்காரர் சரவணன் மற்றும் பெண் போலீசார், அரசு அதிகாரிகள் என 11 பேர் காயம் அடைந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் தடியடி மற்றும் தள்ளுமுள்ளுவில், ஒரு தரப்பை சேர்ந்த 12 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் பேரையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 24 பேரை கைது செய்தனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Related Tags :
Next Story