நர்சுகள் சார்பில் முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்


நர்சுகள் சார்பில் முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
x

நர்சுகள் சார்பில் முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்தது

மதுரை


கொரோனா சிகிச்சைக்காக பணியமர்த்தப்பட்ட நர்சுகளுக்கு பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தர பணி வழங்கக்கோரி கடந்த சில தினங்களாக நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், 9-வது நாள் போராட்டமாக, முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் நர்சுகள் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள், மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தபால் அலுவலகம் முன்பு திரண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அனுப்பி வைத்தனர். இதில் கொரோனா காலத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்ட நர்சுகள் பலர் கலந்து கொண்டனர். இதுபோல், மேலூர், உசிலம்பட்டி பகுதியிலும் இந்த போராட்டம் நடந்தது.


Next Story