காது கேளாத, வாய் பேசாதோர் காத்திருக்கும் போராட்டம்
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாத, வாய்பேசாதோர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாத, வாய்பேசாதோர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இட ஒதுக்கீடு
சிவகங்கை மாவட்ட காது கேளாத மற்றும் வாய் பேசாதோ நல சங்கத்தின் சார்பில் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வறுமைக்கோட்டின் கீழே வாழ்பவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். மாதாந்திர உதவித் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆவின் பாலகம் அமைத்துதர வேண்டும்.
அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தை
மாவட்ட தலைவர் சுல்தான் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் துணைத் தலைவர் வீரமணி பொதுச் செயலாளர் சதீஷ்குமார் துணை செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் செபஸ்தியான் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சிவகங்கை தாசில்தார் தங்கமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.