பிபிசி ஆவணப்படத்தை தடை செய்ததற்கு சென்னையில் ஆர்ப்பாட்டம்


பிபிசி ஆவணப்படத்தை தடை செய்ததற்கு சென்னையில் ஆர்ப்பாட்டம்
x

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை டிபி சத்திரம் அம்பேத்கர் சிலை அருகே, குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்தை தடை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையோரம் அமர்ந்து செல்போன்களில் ஆவணப்படத்தை பார்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தெருக்கள் தோறும் ஆவணப்படத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story