அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
ராமநாதபுரத்தில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பதுபோன்ற 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கோரிக்கை நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் பகுதியில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசுவரி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் திருமுருகன் வரவேற்று பேசினார். மாநில துணை தலைவர் ஞானத்தம்பி தொடக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை யாற்றினார்.
அகவிலைப்படி
இதில், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார், நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மண்டல செயலாளர் பவுல்ராஜ், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ஆயுள் காப்பீடு கழக செயலாளர் முத்துப்பாண்டி, கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கால்நடை பராமரிப்பு மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தெட்சிணாமூர்த்தி, கருவூல கணக்குத் துறை மாவட்ட இணை செயலாளர் ஜெனிஸ்டர், அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் செந்தில்வேல்முருகன், முத்துராமலிங்கம், ராஜமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை கலைத்து தேசிய ஓய்வூதியத்தின் கீழ் உள்ள அனைத்து சந்தாதாரர்களையும் வரையறுக்கப்பட்ட பயனளிப்பு ஓய்வூதிய முறையின் கீழ் கொண்டு வரவேண்டும், அகவிலைப்படி, சரண்டர் விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரோனா தொற்றுக்காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும்.
கோரிக்கை
தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த வெளி முகமை மற்றும் தினக்கூலி ஊழியர்களை நிரந்தர படுத்த வேண்டும் மத்திய. மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.