ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன்களை வழங்க வேண்டும்


ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன்களை வழங்க வேண்டும்
x

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன்களை வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மனு அளித்தனர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. போக்குவரத்து தொழிற்சங்க மாநில துணை தலைவர் இப்ராஹீம் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் கடந்த 1998-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை மரணமடைந்த மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பண பலன்களை வழங்க வேண்டும். 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் மாதாந்திர தொகை ரூ.100 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இதனை ரூ.300 ஆக அதிகரிக்க வேண்டும். 2010-ம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு 7-வது ஊதிய குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள குடும்ப ஓய்வூதியத்தை விரைந்து வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story