சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்
சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊட்டி
தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் சங்கம் சார்பில், நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள நகராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். தமிழரசி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சங்கர் பாபு கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்களுக்கு நிரந்தர பணிக்காலத்துடன் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு திட்டம், அகவிலைப்படி வழங்க நடவடிக்கை வேண்டும். நிதிநிலை அறிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.