சேலத்தில் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
சேலத்தில் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.
சேலம்
சேலம் கலெக்டர் அலுவலகம் பழைய நாட்டாண்மை கட்டிடம் அருகில் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட கவுரவ தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் லோகநாதன், துணைத்தலைவர் ரத்தினகுமார், கோபால், மாவட்ட செயலாளர் செல்வராஜ், துணை செயலாளர் ராஜா, நல்லதம்பி, மாவட்ட பொருளாளர் சுப்ரமணி, சட்ட ஆலோசகர் வந்தே மாதரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தனியார், கூட்டுறவு பென்சன்தாரர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் பென்சன் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். மேலும் தட்டுகளை கையில் ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் நடத்தினர். இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story