பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
x

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

கரூர்

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு குளித்தலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல் ஜவுளி கடை மற்றும் கேண்டில் டிரஸ்ட் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. குளித்தலை வைகைநல்லூர் அக்ரஹாரத்தில் உள்ள கேண்டில் டிரஸ்ட் நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவா டெக்ஸ்டைல் இயக்குனர் ரவிச்சந்திரனின் மகன் ஆதவன், மருமகள் கிருத்திகா ஸ்ரீ ஆகியோர் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகம், சீருடை போன்ற பொருட்களை வழங்கினார்கள். அதுபோல மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா, மாவட்ட குழந்தைகள் நன்னடத்தை அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் தலைவர் மணிமொழி, கேண்டில் டிரஸ்ட் இயக்குனர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story